Monday, July 2, 2012

பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில்

தலைவனே இல்லாத முதல்வன்; முழுமுதற் கடவுள்

மூலவர் : கற்பகவிநாயகர்
துதிக்கை : வலம்சுழி
சிறப்பு : குடவரை
ஈசன் : திருவீசர்
அம்பாள் : சிவகாமி
தலமரம் : மருதமரம்
தீர்த்தம் : ஊருணி
ஊர் : பிள்ளையார்பட்டி
புராணபெயர்: மருதம்பூர்
மாவட்டம் : சிவகங்கை

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataB/bakthi/images/restricted/07-03-2009/karpaga_vinayagar_1.jpg
முதல்வன்:
எடுத்த காரியம் எளிதாக - வெற்றியாக முடிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிவைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. தமிழரின் வழிபாட்டில் விநாயகர் வழிபாடு தொன்மையானது. சங்க இலக்கியங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் இல்லை. "உரையாசிரியர்' என்று அழைக்கப்படும் இளம்பூரணர் செய்யுளியல் உரையில் "தன்தோள் நான்கில்' என்ற அகவலை எடுத்தாள்கிறார். விநாயகர் வழிபாட்டில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வழிபாடு உலகெங்கும் பரவியுள்ளது.

அமைவிடம்: 
 பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலைக் காரைக்குடியிலிருந்து குன்றக்குடி வழியாகத் திருப்புத்தூர் செல்லும் சாலையில் சுமார் பதினாறு கி.மீ. தொலைவு சென்றால் வழிபடலாம். இத்தலத்தின் கிழக்கே மூன்று கி.மீ. தொலைவில் குன்றக்குடியும், வடமேற்கே ஒரு கி.மீ தொலைவில் வயிரவன்பட்டியும் இருக்கின்றன. பிராமி மொழிக்கல்வெட்டுள்ள குடைவரையான பிள்ளையார்பட்டி, மருதங்குடி, திருவீங்கைக்குடி, எருக்காட்டூர், இராசநாராயணபுரம் என்ற பெயர்களால் கல்வெட்டுகளில் ஆளப்பட்டுள்ளது. கற்பக விநாயகரின் திருவுருவத்தைச் செதுக்கிய தச்சனின் பெயர் "எருக்காட்டூர் கோன் பெருபரணன்' எனச் சுட்டப்பெறுகிறது. இது நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் ஒன்பது நகரக்கோயில்களில் ஒன்றாகும்.
இங்குள்ள பிள்ளையார் உலக மக்களின் நன்மைக்காகச் சிவலிங்கத்தைக் கையில் வைத்துத் தவம் புரியும் முகமாக வீற்றிருப்பதால் இவ்வூர் பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படுகிறது.






ஒவ்வொரு ஊரிலும் பிள்ளையாருக்கு ஒவ்வொரு பெயர் உள்ளதே!

"கற்பகம்" என்று பெண்களுக்குத்தானே பெயர்?
இந்த பிள்ளையார்பட்டியில் மட்டும் "கற்பக விநாயகர்" என்ற பெயர் உள்ளதே!
"இதற்குக் காரணம் என்ன?
"கற்பக விநாயகர்" என்றால் பொருள் என்ன?
"கற்பகம்" என்றால் கேட்பதெல்லாம் கொடுப்பவர் என்று பொருளாமே?



கல்+பக என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து உண்டான சொல்தான் "கற்பக" என்ற சொல் உருவானது.
"கல்" என்றால் பாறை என்று பொருள்.
"பக" என்றால் "பகுத்தல் (பிளத்தல்)" என்றும் பொருள்.
"கல்பக" அதாவது "கற்பக" என்றால் பாறையைப் பிளவு படுத்துதல் என்று பொருள்.
கற்பக விநாயகர் என்றால் பிளவு பட்ட பாறையின் உள்ளே உள்ள பிள்ளையார் என்று பொருள்.

சுருங்கச் சொன்னால் "கற்பக விநாயகர்" என்றால் பாறையைப் பிளந்து, பாறையைக் குடைந்து அதன் உள்ளே உள்ள பிள்ளையார், அதாவது "குடைவரைக் கோயிலில் உள்ள பிள்ளையார்" என்று பொருள் என்றேன்.
பிள்ளையார் பட்டியில் மட்டுமல்ல, குன்றக்குடியிலும் இதுபோன்றதொரு பிள்ளையார் உள்ளார், திருப்பரங்குன்றத்திலும் உள்ளார், ஏனைய குடைவரைக் கோயில் உள்ள இடங்களிலும் கற்பகவிநாயகர் இருப்பார் என்றேன்.
 
பிரார்த்தனை

இத்தலத்தில் வணங்கினால் கல்வி ,கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம்,குடும்ப நலம் ,உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும்.புதிய கணக்கு தொடங்கல், வியாபார விருத்தி ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
நேர்த்தி கடன்

சதுர்த்தி விரதம்: முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) செய்து வழிபடல்
கணபதி ஹோமம் :தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்வது மிகவும் விசேஷம்.அருகம்புல் மாலை அணிவித்து வழிபடல்
தலபெருமைகள்

*இங்கு இருப்பவர் வலம் சுழி விநாயகர்.இது மிகவும் விசேசமானது.
*6 அடி உயரம் கொண்ட கம்பீரமான மூலவர் குடவரைக்குள் இருக்கிறது.
*இரண்டு கைகள் கொண்ட விநாயகர்
*மூலவர் வடக்கு முகமாக இருக்கிறார்.
*குடவரைக் கோயில்.
*தமிழக்த்திலேயே உண்டியல் இல்லாத கோயில் இதுதான்.
தல வரலாறு:
கயமுகாசுரனைக் கொன்று விடுகிறார்.இந்த பழி விலக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார் விநாயகப் பெருமான்.சிவபெருமானை வடக்கு நோக்கி அமர்ந்து பூஜித்தற்கான ஐதீகத்தைக் கொண்டது இக்கோயில்.மிகப்பழமையான இத்திருக்கோயில் ஒரு குடவரைக் கோயில் ஆகும்.புதிய கணக்கு தொடங்கல், வியாபாரம் ஆரம்பித்தல் போன்ற காரியங்களுக்கு இத்திருக்கோயில் மிக சிறப்பு வாய்ந்தது.
முக்கிய திருவிழாக்கள்:
 

*சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள். ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக்கட்டி கொடிஏற்றம் செய்து திருநாள் தொடங்கும்.சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளுவது விசேசம்.மிக விமரிசையாக நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்

*திருக்கார்த்திகை

*மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார்.

இவை தவிர தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்கள் , தீபாவளி ,பொங்கல் போன்ற விசேசநாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.அதுமட்டுமில்லாமல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் கோயில் இது




கோயில் தல விருட்சம் மருதமரம்



 பொது தகவல்கள் :

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சிவகங்கை 44 கி.மீ.
காரைக்குடி 16 கி.மீ.
மதுரை 74 கி.மீ.
திருப்பத்தூர் 9 கி.மீ.

தங்கும் வசதி : குடும்பத்தோடு வரும் பக்தர்கள் கோயில் விடுதிகளிலோ அல்லது திருப்பத்தூர், காரைக்குடி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
கோயில் விடுதிகள் : பி.கே.என்.கே.விடுதி.

திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய ஊர்களில் லாட்ஜ்கள் உள்ளன.

போக்குவரத்து வசதி : *சிவகங்கை, திருப்பத்தூர்,காரைக்குடி ஆகிய ஊர்களிலிருந்து பிள்ளையார் பட்டிக்கு பேருந்து வசதி உள்ளது..

*அருகிலுள்ள ரயில் நிலைம் காரைக்குடி.
*அருகிலுள்ள விமான நிலையங்கள் மதுரை,திருச்சி.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.