கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக்
குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக
அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன. தமிழில்
கோயில் என்னும் சொல்
'கோ' + 'இல்' எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே 'கோ'
என்பது இறைவனையும், 'இல்' என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும்
குறிக்கும். எனவே 'கோயில்' இறைவன்
வாழுமிடம் என்னும் பொருள் தருகிறது.(கோயில் என்பதற்கு ஆலயம் என்றொரு
பெயரும் உண்டு.
ஆலயம் என்பது ஆன்மா லயப்படுகின்ற இடம் என்பதாகும். இங்கு "கோ" என்றால் "பசு" அதாவது "ஆன்மா என்பதையும் மனம் கொள்ள வேண்டும்) பண்டைய எகிப்தில், ப்ர் (pr) என்பது வீட்டையும், சமயம் சார்ந்த புனிதக் கட்டிடங்களையும் சேர்த்தே குறித்தது. இதனால் அங்கே இக் கட்டிடங்கள் இறைவன் வாழும் இடங்களாகவே கருதப்பட்டன என்பது பெறப்படுகின்றது. கோயிலைக் குறிக்கும் ஆலயம் என்னும் சொல் ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடம் பொருள் கொண்டது.
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் கோட்டம் என்னும் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கட்டிடங்களைக் குறிக்கும் சொற்கள் பல மொழிகளிலும், சொற்பிறப்பியல் அடிப்படையில் பல்வேறு பொருள் உணர்த்துவனவாக இருந்தாலும், தற்காலத்தில் பல்வேறு சமயத்தினரதும் வணக்கத்துக்கான இடங்களைக் குறிக்க அவை பயன்படுவதை அவதானிக்கலாம்.
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.